Tuesday 23rd of June 2026

English Tamil
Advertiesment


கடன் பிரச்சினைக்கு இதுவே தீர்வு


2020-06-06 14896

தற்போது இருக்கும் உலகில் கடன் இல்லாத நபர்கள் என்று யாரையும் கூற முடியாது. எதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்கியிருப்பர்.

அதன் பின் நாளைடைவில் அந்த கடனை அடைக்க முடியாமல், அதற்கு ஒரு கடன், அதன் பின் ஒரு கடன் என்று சென்று கொண்டே இருக்கும்.

ஆனால் அந்த கடனை எப்போது தான் அடைப்போம் என்று பலரும் நினைத்து கவலைப்படுவது உண்டு.

இதற்கு நாம் சம்பாதிக்கும், கிடைக்கும் பணத்தை சிறிதளவு மிச்சப்படுத்தி, அதை சேர்த்து வந்தாலே கொஞ்சம் கடனை அடைத்துவிடலாம்.

இருப்பினும் தெய்வீக நம்பிக்கை என்ற ஒன்று பலருக்கும் உள்ளது. ஒரு விஷயத்தை நாம் தான் செய்திருந்தாலும், நாம் இன்று அந்த கோவிலுக்கு சென்றதாலோ, பலருக்கு உதவியதால் தான் என்னவோ இது நடந்தது என்ற நம்பிக்கை உண்டாகும்.

அந்த வகையில் கடனால் தவிக்கும் பலருக்கும் ஒரு பரிகாரம் ஒன்று உள்ளது. இந்த பரிகாரத்தை 27 வாரம் செய்து வந்தால் நம்மை அதிகம் தொந்தரவு செய்யும் கடன்கள் அதிரடியாக விலகி கடனில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இழைக்காத நெல்லி மரக்கட்டையை எடுத்துக் கொண்டு வெள்ளிக் கிழமையன்று நெய்யால் மெழுகி சர்க்கரையால் கோலம் போட்டு காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளோ அல்லது மதியம் 1 மணியில் இருந்து 2 மணிக்குள்ளோ சுக்கிர ஹோரையில் வெள்ளி விளக்கில் பசு நெய் விட்டு தாமரை தண்டு திரியால் தீபம் ஏற்றி ஐந்து வகையான பழம் நைவேத்தியம் செய்து 27 வாரம் வணங்கிவர நம்மை அதிகம் தொந்தரவு செய்யும் கடன்கள் அதிரடியாக விலகி கடனில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

 

Advertiesment